வெள்ளி, 17 டிசம்பர், 2010
பாவம் சாரு
ஆனந்த விகடனில் சாரு மனம் கொத்திப்பறவை தொடர் எழுதி வருகிறார். அவர் கொத்துகிற கொத்துதான் தாங்க முடியவில்லை. தன்னைப் பற்றி எந்த தமிழ் எழுத்தாளர்களும் செய்து கொள்ளாத பில்டப்பை சாரு செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு பெரும் பணக்கார வாசகர்கள், அழகிய இளம் வாசகிகள் இருப்பதைப் போன்ற தோற்றத்தை இந்தத் தொடர் மூலம் உருவாக்குகிறார். சாரு ஒரே சமயத்தில் தன்னை ஒரு எம். எல் பார்ட்டி போலவும், இன்டலெக்சுவல் போலவும், பிளேபாய் போலவும் காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார். உண்மையில் சாரு என்னதான் இலக்கிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார். சீரோ டிகிரி, ராசலீலா போன்ற மூன்றாம் தரமான நாவல்களை எழுதிவிட்டு ஏதோ உலக தரத்துக்கு சாதித்து விட்டது போல உளறிக்கொண்டிருக்கிறார். இவரை ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் காட்ட வேண்டியது அவசியம். தன்னை, தனது சுயத்தை அழித்துக் கொள்பவன்தான் ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க முடியும். ஆனால் சாருவோ தன்னை Establish செய்து கொள்வதில் கவனமாக இருக்கிறார். இது ஒரு அரசியல்வாதிக்குறிய கவனம். அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பது போல பாவலா காட்டுவார். ஆனால் யாருக்கும் தெரியாமல் அவர்கள் காலில் விழவும் தயங்கமாட்டார். இவர் தனக்கு தண்ணி வாங்கிக் கொடுக்கும் இயக்குநர்களது படங்களை ஆகா ஓகோவென்று பாராட்டுவார். அப்படி கொடுக்காதவர்களை பல மேலை இயக்குநர்களின் பெயரைச் சொல்லி மிரட்டி பணியவைக்கும் இலக்கிய தாதா வேலையைச் செய்வார். இவரும் மனுஷ்யபுத்ரனும் இலக்கியவாதிகளுக்குறிய எல்லா அறங்களையும் ஒழித்துக்கட்டியவர்கள். இளம் இலக்கியவாதிகளை Corrupt செய்யும் இவர்களை இளம்படைப்பாளிகள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். ஆனந்த விகடன் ஒரு வெகுசனப் பத்திரிகை. அதில் இவர் சிறுபத்திரிகைக்குறிய அரசியல் புத்தியை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். தன்னை ஏதோ ஒரு ஐரோப்பிய இலக்கியவாதியைப் போல காட்டிக்கொள்ளும் சாரு இப்படி தன்னை புகழ்ந்து கொள்வதை விடுத்து ஒரே ஒரு நல்ல படைப்பையாவது கொடுக்க முயன்றால் அவரை வேறு யாராவது பாராட்டுவார்கள். பாவம் சாரு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாருவா? யார் அது? எங்கேயும் நான் கேள்விப்பட்டதில்லையே?
பதிலளிநீக்குஏதோ சாக்கடைபோலும்....
வணக்கம்.....
பதிலளிநீக்குதாங்கள் இவ்வாறு கூறுவதின் காரணம் என்ன?
அப்படி என்ன நீங்கள் சாதித்துவிட்டீர்கள்?
சாதித்திருத்தால் உங்கள் படைப்புகளை குறிப்பிடவும்.....