அன்பின் மிகுதியில்ஊற்றென பெருக்கெடுக்கும்
அவள் கண்ணீருக்கு. தன்பரிவு செற்களில்
வாய்க்கால் அமைத்தான்
சுமையுந்து ஓட்டுநர்
நேற்று அதிகாரத்தின்
தடித்த எஃகு குறிகளின்
வன் புணர்ச்சியில்
மழைக்காக ஏங்கும்
பாழ்நிலம் போல்
கண்ணிபோன குறி பற்றி
கூறினாள் தனம்
அப்போது அவன் வானம்
வெளிறிக்கொண்டிருந்தது
மேலும் சூல் கொண்ட
அச்சத்தை இடறிவிட்டு
பல கிளைகளுள்ள
தன் யோனியில்
ஒரு பறவையாய் வந்தமர்ந்து
ஓய்வெடுக்க அழைத்துச் செல்கிறாள்
சூரியகாந்திகள் பூத்து குலுங்கும்
அடர் வனத்திற்குள்
அவன் உதவியாளன்
ஓட்டுனராகும் லட்சிய வேட்கையுடன்
திமிர் பிடித்த லாரியை
சுற்றிச் சுற்றி வருகிறான்
அந்த தேசிய நெடுஞ்சாலையில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக