செவ்வாய், 30 நவம்பர், 2010

கவிதைகள்

                                                      சங்கம் முதல் சமகாலம் வரை 
                                                      எந்த கவிஞனும் எழுதிவிடாத
                                                      சிறந்த கவிதையொன்றை
                                                      தன்னுள் புதைத்துக் கொண்டு
                                                     காற்றின் இசைக்கேற்ப நடனமாடிக்
                                                     கொண்டிருக்கிறது 
                                                     அந்த மேசை
                                                     அந்த காகிதம்.

ஆதி

என் வீட்டு தோட்டத்தில்
கொய்யா கனிகளை
கொத்தி தின்ன வரும்
பறவைகளை திசை திருப்பிட
வைக்கோல் பொம்மைகளை
ஏவினேன்
ஆனால் அச்சமின்றி தன்
ஜோடிகளுடன்
மரக் கிளைகளில் அமர்ந்து
உண்டு பசியாறி செல்கின்றன
குருவிகள் கொத்திய கொய்யா கனிகளைச்
சுவைக்கும் பொழுதில் அறிந்து கொண்டேன்
ஏதோ ஒரு பறவையின் எச்சத்தில்
விளைந்த மரமென்று.