ஆச்சரியங்கள் ஏதுமின்றி
அதே பச்சையத்துடன்
அதே பருண்மையுடன்
அதே குணத்துடன்
அதே மனத்துடன்
அதே சுவையுடன்
அதே ஒளியுடன்
அரோக்கியமான தேகத்துடன்
சுயாதீனத்துடன்
தீர்க்கமான பார்வையுடன்
நம்மை பார்த்து புன்னகைக்கிறது
சாலையோர குப்பை மேட்டில்
செழித்து விளைந்திருக்கும்
ஒரு பூசணிக்கொடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக