திடிரென வலுத்த மழைக்குத்தான்
பாத்திரம் கழுவி கொணடடிருந்தவள்
மாடியில் காயும் துணிகளை
எடுக்க ஓடினாள்
அப்போது அவளுக்கு வயது பத்து
வன்மமும் சூழ்ச்சியும் நிறைந்து
தொடுவானம் வரை நீளும்
அந்த வீட்டின் படிகட்டுகளில்
இறங்கி கொண்டிருக்கிறாள்
குடுகுடு கிழவியாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக