சனி, 11 டிசம்பர், 2010

கார்டூன் தாத்தா

அருந்தி துக்கியெறியப்பட்ட
தேநீர் குவளையாய்
புளிய மரத்தடியில் கிடக்கிறான் முதியவன்
தன் உறவுகளால் கைவிடப்பட்டு
இந்நகருக்கு வந்தவன்
யாவருக்கும் பால்,மது வாங்கி வரும் சிறுவனாக,
பலரின் ஆஸ்தான விறகு உடைப்பாளனாக
உணவை மட்டுமே கூலியாக பெற்றுக் கொள்பவனாக
பூட்டிய இல்லின் காவலனாக
குழந்தைகளின் கார்ட்டூன் தாத்தாவாக
அனைவரின் கைத்தடியாக விளங்கியவரிடம்
சுகவீனமுற்ற சிறுவனுக்காக
அலகு குத்திய போது
நகரமே தன் உறவு கூறி சிலாகித்தது
மாரடைத்து  கிடந்த உடலை
சூழ்ந்து இரக்கம் கவிய நின்றவர்கள்
தொப்பூழ் கொடி உறவென கூறி
நகர்ந்தனர் தங்களின்  பிற பணி பொருட்டு
பிறகு அவ்வீதியின் தவிர்க்க இயலா
முதியவன்
காவல் துறைக் குறிப்பேட்டில் அனாதைப் பிணமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக